6 பேருக்கு வயிற்று போக்கு நெல்லிக்குப்பத்தில் முற்றுகை

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் தரமற்ற உணவு வழங்கியதை கண்டித்து ஓட்டலை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

நெல்லிக்குப்பம் கீழ்பட்டாம்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் நேற்று மதியம் அண்ணாநகரை சேர்ந்த 6 பேர் சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் 6 பேருக்கும் அடுத்தடுத்து வயிற்று போக்கு ஏற்பட்டதால் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ஓட்டலில் கெட்டு போன உணவை சாப்பிட்டதால் தான் 6 பேருக்கும் வயிற்று போக்கு ஏற்பட்டதாக கூறி அவர்களது உறவினர்கள் 25 பேர் 7:30 மணிக்கு ஓட்டலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரப்பபு நிலவியது.

நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இச்சம்பவம் குறித்து புகார் அளித்தால் உணவு பாதுகாப்பு அலுவலர்களிடம் கூறி உணவின் தரத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இதனையேற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement