கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு --தண்ணீர் பந்தல்கள் எதிர்பார்ப்பு
ராஜபாளையம் : கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தங்கள் தலைமை உத்தரவுக்காக காத்திராமல் மக்களின் தாகம் தீர்க்க திறந்து செயல்படுத்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வெயில் காலத்தில் பொது மக்களுக்கான தண்ணீர் தேவை அதிகரிக்கும். பஸ் ஸ்டாண்ட், மெயின் ரோடுகளின் சந்திப்பு, சந்தை, மருத்துவமனை, பஸ் ஸ்டாப்புகள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் உள்ள இலவச குடிநீர் சேவைகளும் பல்வேறு காரணங்களால் முறையாக இயங்காமல் உள்ளன. இதனால் வெளியிடங்களுக்கு வரும் பெண்கள், குழந்தைகள், முதியோர் என மக்கள் குடிநீருக்காக அள்ளாடும் நிலை ஏற்படுகிறது.
இதை தவிர்க்க சமூக ஆர்வலர் குழுக்கள், பொதுச் சங்கங்கள், அரசியல் கட்சியினர் சார்பில் போட்டி போட்டு தண்ணீர் பந்தல்களை அமைப்பது வழக்கம். தற்போது கோடையின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்களும் இவற்றை எதிர்பார்த்து உள்ளனர்.
இந்நிலையில் அரசியல் கட்சியினர் தங்கள் கட்சி தலைமை அறிவிப்பதற்காக காத்திராமல் மக்களின் தேவை கருதி தண்ணீர் பந்தல்களை அமைப்பதுடன் விளம்பரத்திற்காக இல்லாமல் தொடர்ந்து சேவைகளை தொடங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
மேலும்
-
உ.பி.,யில் 'புல்டோசர்' நடவடிக்கைக்கு கண்டனம் :பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு தர உத்தரவு
-
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே... * மும்பை அணியின் புது நாயகன் அஷ்வனி
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: பஞ்சாப் அணி அபார வெற்றி
-
வக்பு மசோதாவை கடுமையாக எதிர்க்க ' இண்டி' கூட்டணி முடிவு
-
மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்த கணவன்: சில நாட்களில் நடந்த 'டுவிஸ்ட்'
-
வேலூரில் நான்கு வழிச் சாலை அமைக்க ரூ.752.94 கோடி: நிதின் கட்கரி தகவல்