அரசு துறை வாகன ஓட்டுநர்கள் சங்க மாநில செயற்குழு

விழுப்புரம், : தமிழ்நாடு அரசுதுறை வாகன ஓட்டுநர்கள் தலைமை சங்க மாநில செயற்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
மாநில தலைவர் பச்சையப்பன் தலைமை தாங்கி னார். மாவட்ட தலைவர் சிவக்குமார், மாநில துணை தலைவர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். அமைப்பு செயலாளர் விஜயக்குமார் வரவேற்றார். பொது செயலாளர் குமார் தீர்மானங்கள் குறித்தும், பொருளாளர் முருகன் நிதிநிலை அறிக்கை வாசித்தனர்.
தலைமை சங்க ஆலோசகர் சுகுந்தகுமார், ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் ஆண்டி சிறப்புரையாற்றினர். துணை தலைவர்கள் அன்பழகன், விஜயன், கண்ணதாசன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி பின்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும். அனைத்து அரசு துறை வாகனங்களுக்கும் வாகன காப்பீடு செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும்
-
உ.பி.,யில் 'புல்டோசர்' நடவடிக்கைக்கு கண்டனம் :பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு தர உத்தரவு
-
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே... * மும்பை அணியின் புது நாயகன் அஷ்வனி
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: பஞ்சாப் அணி அபார வெற்றி
-
வக்பு மசோதாவை கடுமையாக எதிர்க்க ' இண்டி' கூட்டணி முடிவு
-
மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்த கணவன்: சில நாட்களில் நடந்த 'டுவிஸ்ட்'
-
வேலூரில் நான்கு வழிச் சாலை அமைக்க ரூ.752.94 கோடி: நிதின் கட்கரி தகவல்