புறக்கணிக்கும் பஸ்கள் கண்காணிக்க நடவடிக்கை
திருப்புவனம் : திருப்புவனம் நகருக்குள் வராமல் பைபாஸ் ரோட்டிலேயே செல்லும் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மதுரையில் இருந்து திருப்புவனம், திருப்பாச்சேத்தி வழியாக ராமநாதபுரம், ராமேஸ்வரம் உள்ளிட்ட நகரங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.
நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்ட பின் அரசு பஸ்கள் பலவும் திருப்புவனம், திருப்பாச்சேத்தியை புறக்கணித்து பைபாஸ் ரோட்டிலேயே செல்வதால் தினசரி பள்ளி, கல்லுாரி, அரசு, தனியார் அலுவலகங்களுக்கு சென்று வருபவர்கள் சிரமத்திற்குள்ளாகினர்.
திருப்புவனத்தில் இருந்து மதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினசரி ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர்.
நகருக்குள் பஸ்கள் வராததால் உரிய நேரத்தில் பணிக்கு செல்ல முடியாமல் தவிப்பிற்குள்ளாகினர்.
இதுகுறித்து முத்துராஜா என்பவர் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு புகார் அனுப்பியதை தொடர்ந்து போக்குவரத்து கழக அதிகாரிகள் இது சம்பந்தமாக திருப்புவனத்தில் நேர கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டு நகருக்குள் வரும் பஸ் கண்டக்டர்களிடம் கையெழுத்து பெறவும் நகருக்குள் வராத பஸ் டிரைவர், கண்டக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும்
-
உ.பி.,யில் 'புல்டோசர்' நடவடிக்கைக்கு கண்டனம் :பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு தர உத்தரவு
-
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே... * மும்பை அணியின் புது நாயகன் அஷ்வனி
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: பஞ்சாப் அணி அபார வெற்றி
-
வக்பு மசோதாவை கடுமையாக எதிர்க்க ' இண்டி' கூட்டணி முடிவு
-
மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்த கணவன்: சில நாட்களில் நடந்த 'டுவிஸ்ட்'
-
வேலூரில் நான்கு வழிச் சாலை அமைக்க ரூ.752.94 கோடி: நிதின் கட்கரி தகவல்