எஸ்.கரிசல்குளம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி விழா துவக்கம்

மானாமதுரை : மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா காப்பு கட்டுடன் துவங்கியது.

இக்கோயிலில் நேற்று முன்தினம் இரவு காப்பு கட்டுடன் பங்குனி திருவிழா துவங்கியது.

பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். விழா நாள்களின் போது தினம்தோறும் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள் நடைபெறும். ஏப்., 6ம் தேதி இக்கோயிலில் பொங்கல் வைத்து பக்தர்கள் நேர்த்தி செலுத்த உள்ளனர்.

அன்று மாலை6:00 மணிக்கு எஸ்.கரிசல்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம், பூக்கரகம், தீச்சட்டிகள், கரும்பாலை தொட்டில், ஆயிரங்கண் பானை மற்றும் அலகுகள் குத்தியும், பூக்குழி இறங்கியும் நேர்த்தி செலுத்த உள்ளனர்.

டிரஸ்டிகள் ராக்கு லட்சுமணன், பாண்டி ஆகியோர் ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.

Advertisement