பெண்கள் கருத்தரங்கம்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை ரமணாஸ் மகளிர் கலை கல்லூரியில் பெண்களுக்கான கருத்தரங்கம் நடந்தது.

விருதுநகர் மாவட்ட நிர்வாகம், சமூக நலன் மகளிர் உரிமை துறை இணைந்து நடத்திய முகாமிற்கு கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். கல்லூரிச்செயலர் இளங்கோவன் வரவேற்றார். வக்கீல் ராஜா, டாக்டர் கோமதி,. கனரா வங்கியின் முதன்மை மேலாளர் பிலால் ஷாஜகான் நிதி பேசினர்.

ரமணாஸ் கல்லூரி சேர்மன் ராமச்சந்திரன், பி.எட்., கல்லூரி செயலாளர் சங்கரநாராயணன், துணை முதல்வர் பெளர்ணா கலந்து கொண்டனர். முதல்வர் தில்லை நடராஜன் நன்றி கூறினார்.

Advertisement