தண்ணீரின்றி கத்தரி, வெண்டை சாகுபடி பாதிப்பு

காரைக்குடி : சாக்கோட்டை ஒன்றியத்தில் கோடையால் தண்ணீரின்றி கத்தரி, வெண்டை சாகுபடி பரப்பு பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த ஒன்றியத்தில் 4 ஆயிரம் எக்டேரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இங்குள்ள பெத்தாச்சிகுடியிருப்பு, பெரியகோட்டை, அரியக்குடி, இலுப்பக்குடியில் கத்தரி, வெண்டை, சோளம், மிளகாய், தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு மானாவாரியாக விவசாயம் அதிகம் நடக்கிறது.

தற்போது கோடை வெயிலின் தாக்கத்தால் தண்ணீரின்றி கத்தரி, வெண்டை நடவு பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

Advertisement