கண்டமங்கலம் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த போலீசார் வலியுறுத்தல்
திருபுவனை : கண்டமங்கலம் பகுதியில் திருட்டு மற்றும் குற்றங்களை தடுப்பது குறித்து வணிகர்கள் மற்றும் அடகு கடை உரிமையாளர்களுடன் போலீசார் நல்லுறவு ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தலைமையேற்று, வணிகர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசினார்.
அப்போது குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காணவும் ஒவ்வொரு கடையிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். சந்தேகப்படும் நபர்கள் கடைகளுக்கு வரும்போது உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும் கடைகளில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது.
மீறி விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். கண்டமங்கலம் பகுதியை சேர்ந்த வியாபாரிகள், நகைக்கடை உரிமையாளர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ.26.4 கோடி அழகு சாதன பொருட்கள் துறைமுகத்தில் பறிமுதல்: 2 பேர் கைது
-
ரூ.110 கோடியில் குரோம்பேட்டையில் மாவட்ட மருத்துவமனை கட்டடம் ரெடி பல், மறுவாழ்வு மருத்துவமனையாக மாறும் பழைய கட்டடம்
-
தேசிய நெடுஞ்சாலையில் படியும் மண்ணால் ஆபத்து
-
மார்ச்சில் 92.10 லட்சம் பேர் பயணம் 'மெட்ரோ'வில் 6 லட்சம் அதிகரிப்பு
-
குட்டையில் தனிநபர் ஆக்கிரமிப்பு போலீஸ் உதவியுடன் அகற்றம்
-
* கழிவுநீர் கலந்து துர்நாற்றத்துடன் குடிநீர் வினியோகம் அச்சம் புழுக்களும் நெளிவதால் தொற்று அபாயத்தில் மக்கள்
Advertisement
Advertisement