2 பைக்குகள் மாயம்

புதுச்சேரி: இரண்டு பைக்குகள் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

லாஸ்பேட்டையை சேர்ந்தவர் ரமேஷ், 44. இவர் தனது பைக்கை கடந்த 26ம் தேதி கோர்ட் வளாகம் எதிரே நிறுத்தி சென்றார். மறுநாள் வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை. புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல், பாகூர் இருளஞ்சந்தையை சேர்ந்த குருமூர்த்தி, 21, என்பவர், புதுச்சேரி ரோமன் ரோலண்ட் வீதியில் தனது பைக்கை நிறுத்திவிட்டு, கடற்கரை சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, பைக் காணவில்லை. பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement