சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

புதுச்சேரி; தொடர் விடுமுறை காரணமாக புதுச்சேரிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு, வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். கடந்த சில வாரங்களாக பிளஸ் 2 பொதுத்தேர்வு காரணமாக புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை சற்று குறைவாக இருந்தது.

இந்நிலையில் ரமலான், யுகாதி போன்ற பண்டிகைகளை முன்னிட்டு, தொடர் தொடர் விடுமுறை காரணமாக புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக புதுச்சேரி ஒயிட் டவுன் பகுதியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் போட்டோ ஷீட் எடுத்து மகிழ்ந்தனர்.

பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் குடைகளை பிடித்தபடி சுற்றுலா பயணிகள் சென்றனர். மாலை நேரங்களில் அதிகமான சுற்றுலா பயணிகள் கடற்கரை சாலையில் நடையிற்சி மேற்கொண்டனர். இதேபோல் சுண்ணாம்பாறு படகு குழாமிலும் சுற்றுலா பயணிகள் அதிகமாக காணப்பட்டனர். வீராம்பட்டினம் கடற்கரை, பாண்டி மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக குவிந்தனர்.

Advertisement