ராஜஸ்தான், பீகார் மாநில உதய நாள் விழா

புதுச்சேரி : ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங் களின் உதய நாள் விழா புதுச்சேரி கவர் னர் மாளிகையில் நடந்தது.

விழாவிற்கு, கவர்னர் கைலாஷ்நாதன் தலைமை தாங்கினார். தலைமைச் செயலர் சரத் சவுக்கான், கல்வித்துறை செயலர் அமன் சர்மா, தகவல் தொழில் நுட்பத்துறை இயக்குனர் சிவ்ராஜ் மீனா, பயிற்சி ஐ.பி.எஸ். அதிகாரி சிவம், புதுச்சேரியில் வாழும் ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநில பிரதிநிதிகள், கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில், இரண்டு மாநிலங்களின் கலை, பண்பாடு, வரலாறு ஆகியவற்றை எடுத்துக்காட்டும் வகையில் பல்வேறு கலந்துரையாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

இதில், கவர்னர் கைலாஷ்நாதன் பேசுகையில், மாநிலங்களின் உதய நாள் விழா, பன்முகப்பட்ட கலாச்சார தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாக அமைகிறது. பீகார் மாநிலம் கல்வி மற்றும் நிர்வாகத்தின் மையமாக இருந்து வருகிறது. நாட்டின் அறிவு மற்றும் ஆன்மீக வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ளது.

ராஜஸ்தான் நிர்வாக அமைப்பு மற்றும் வணிக செழிப்புக்கு பிரபலமானது. பாலைவனங்களையும், கோட்டைகளையும் உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாற்ற முடியும் என்பதை ராஜஸ்தான் காட்டி இருக்கிறது.

நமது மரபுகளும், மொழிகளும் வேறுபட்டு இருக்கலாம். ஆனால், நாட்டின் வளர்ச்சியை நோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணித்துக் கொண்டு இருக்கிறோம்.

ஒவ்வொரு மாநிலத்தின் பங்களிப்போடும் 2047 ம் ஆண்டு வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற கனவை நனவாக்க வேண்டும். பீகார் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த மக்கள் வசிப்பதால் புதுச்சேரி நிறைய பயனடைந்து இருக்கிறது என்றார்.

Advertisement