ஆபாசமாக பேசிய வாலிபர் கைது

நெட்டப்பாக்கம் : பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நெட்டப்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது கடலுார் பகுதியைச் சேர்ந்த அரசு 20, என்பவர், நெட்டப்பாக்கம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு பொதுமக்களை பார்த்து ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்தார்.

அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவரை கைது செய்தனர்.

Advertisement