காரைக்கால் குடியுரிமை பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி., அஜித்குமார் சிங்லா ஆய்வு
காரைக்கால் : காரைக்காலில் புதிதாக கட்டப்பட்டுள்ள குடியுரிமை பாதுகாப்பு பிரிவை புதுச்சேரி காவல்துறை ஐ.ஜி.,அஜித்குமார் சிங்லா ஆய்வு செய்தார்.
காரைக்கால் காவல்துறை சார்பில் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள குடியுரிமை பாதுகாப்பு பிரிவு கட்டடத்தை நேற்று முன்தினம் புதுச்சேரி காவல்துறை ஐ.ஜி.,அஜித்குமார் சிங்லா ஆய்வு செய்தார்.
முன்னதாக திருநள்ளாறு போலீஸ் ஸ்டேஷனில் சாலை விபத்து, உயிரிழப்புகளை தவிர்க்க கட்டாயம் தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தி பயனாளிகளுக்கு இலவச தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சியை ஐ.ஜி., துவக்கி வைத்து பேசுகையில்;
சாலை விபத்தில் பூஜிய உயிரிழப்பு என்ற நோக்கத்தோடு காவல்துறை இலவசமாக தலைக்கவசம் வழங்கியுள்ளது. மாநில மக்கள் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருப்பதாகவும், வாகன திருடர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்,
சைபர் கிரைம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பேசினார்.
இந்நிகழ்ச்சியில் சீனியர் எஸ்.பி.,லட்சுமி சௌஜன்யா,எஸ்.பி., சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் கிறிஸ்டியன் பால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மேலும்
-
'டி.என்.சி.ஏ., லீக்' கிரிக்கெட் காஸ்மோபாலிடன் கிளப் வெற்றி
-
பரனுாரில் சாலை விபத்து: வாலிபர் பலி
-
மாநில கைப்பந்து: எஸ்.ஆர்.எம்., அணி 'சாம்பியன்'
-
ராஜகீழ்ப்பாக்கம் ஏரியின் குறுக்கே ரூ.233 கோடியில் உயர்மட்ட பாலம் * அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு
-
வாலிபருக்கு கத்திக்குத்து இருவர் கைது
-
எஸ்.டி.ஏ.டி., நீச்சல் குளங்களில் கோடை கால பயிற்சி துவக்கம்