சைக்கிள் திருடிய வடநாட்டு பெண் கைது

புதுச்சேரி; புதுச்சேரியில் விலை உயர்ந்த சைக்கிள் திருடிய வடநாட்டு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி, வெங்கட்டா நகரில் 20 வயது மதிக்கத் தக்க பெண் ஒருவர், நேற்று முன்தினம் அங்குள்ள ஒரு வீட்டிற்கு சென்ற, அவரது தாய்க்கு மருந்து வாங்க சைக்கிள் தரும்படி கேட்டுள்ளார். அப்போது அங்கு வீட்டில் இருந்த பத்தாம் வகுப்பு மாணவர் சைக்கிளை அந்த பெண்ணிடம் தந்துள்ளார்.

சைக்கிளை எடுத்து சென்ற அந்த பெண் திருப்பி வரவில்லை. அப்பெண் சைக்கிள் திருடிச் சென்றது தெரியவந்தது.

மாணவரின் பெற்றோர் பெரியக்கடை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அங்குள்ள சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்தனர். ஆய்வில் சைக்கிள் திருடியது வடநாட்டு பெண் சுஷ்மிதா என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கோவிந்த சாலையில் இருந்த சுஷ்மிதாவை கைது செய்து, அவரிடம் இருந்த சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Advertisement