செயற்கை நுண்ணறிவு பயிற்சி பட்டறை

புதுச்சேரி : புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் கணினித் துறை நோக்கியா நிறுவனத்துடன் இணைந்து குபெர்னெட்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு இரண்டு நாள் பயிற்சி பட்டறையை நடத்தியது.
பயிற்சி பட்டறைக்கு, பல்கலைக்கழக துணை வேந்தர் மோகன் தலைமை தாங்கினார். கணிப்பொறி துறையின் தலைவர் இளவரசன் வரவேற்றார். பயிற்சி பட்டறையை கல்வி புலன் இயக்குனர் விவேகானந்தன் துவக்கி வைத்தார். நோக்கியாவின் சென்னை அலுவலக இயக்குநர் குரு ராஜேஷ் கலந்து கொண்டு பயிற்சி பட்டறையின் நோக்கவுரையாற்றினார்.
பயிற்சி பட்டறையில் புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மாநிலங்களில் இருந்து 250 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இரண்டு நாள் பயிற்சி பட்டறையில் சங்கர நாராயணன் மற்றும் கிஷோர் ராஜ் ஜெயக்குமார் உள்ளிட்ட நோக்கியாவின் நிபுணர்கள் குழு, பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு செயல் விளக்கம் அளித்து, நவீன தொழில் நுட்பத்தில் உள்ள வாய்ப்புகளை தெளிவுபடுத்தினர். ஏற்பாடுகளை கணிப்பொறி துறையின் பேராசிரியைகள் ஷாலினி, தேன்மொழி உட்பட பலர் செய்திருந்தனர்.
மேலும்
-
'டி.என்.சி.ஏ., லீக்' கிரிக்கெட் காஸ்மோபாலிடன் கிளப் வெற்றி
-
பரனுாரில் சாலை விபத்து: வாலிபர் பலி
-
மாநில கைப்பந்து: எஸ்.ஆர்.எம்., அணி 'சாம்பியன்'
-
ராஜகீழ்ப்பாக்கம் ஏரியின் குறுக்கே ரூ.233 கோடியில் உயர்மட்ட பாலம் * அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு
-
வாலிபருக்கு கத்திக்குத்து இருவர் கைது
-
எஸ்.டி.ஏ.டி., நீச்சல் குளங்களில் கோடை கால பயிற்சி துவக்கம்