வரலாற்றை படித்தால் மனிதர்களை புரிந்து கொள்ளலாம்; முன்னாள் தலைமை செயலர் இறையன்பு பேச்சு

கடலுார் : வரலாற்றை படித்தால் தான் மனிதர்களை புரிந்து கொள்ள முடியும் என, முன்னாள் தலைமை செயலர் இறையன்பு பேசினார்.
கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தில் புத்தக கண்காட்சி நிறைவு விழா நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் அனு வரவேற்றார். முன்னாள் தலைமை செயலர் இறையன்பு பேசியதாவது:
வரலாற்றில் மிகச்சிறப்பான இடம்பெற்ற ஊர் கடலுார். இன்றைய இளைஞர்கள் பாட திட்டத்தை தாண்டி எதையும் வாசிப்பதில்லை. போட்டி தேர்வுகளுக்காக வாசிக்கிறார்கள். தீவிரமாக வாசிக்கும் சிலர் படிப்பாளிகளாக இருப்பதில்லை. படைப்பாளிகளாக இருக்கின்றனர்.
செய்தித்தாளை கூட வாசிப்பதில்லை. மொபைலில் வரும் ஒரு சில செய்திகளை பார்த்து திருப்தியடைகின்றனர். அது வைட்டமின் மாத்திரையை சாப்பிட்டுவிட்டு, சாப்பாடு வேண்டாம் என சொல்வது போன்றது.
புத்தக திருவிழாக்கள் வாசிக்கும் ருசியை ஏற்படுத்துவதற்கு தான். அதை இன்றைய தலைமுறையினர் இழந்து விடக்கூடாது. வரலாற்றை படித்தால் தான் மனிதர்களை புரிந்து கொள்ள முடியும். மனித இயல்புகளை அறிந்து கொள்ள முடியும். நமக்கான அடையாளத்தைப் பெற முடியும்.
தமிழ் மன்னர்கள் கிரீடங்களை அணிந்துகொண்டு, அரியாசனத்தில் அமர்ந்து கொண்டு ஆட்சி செய்யவில்லை. காட்சிக்கு எளியவர்களாக, மக்களோடு மக்களாக இருந்தார்கள். அப்போது தான் மக்கள் இயல்பாக பேசுவார்கள்.
தமிழ் வரலாற்றில் நீர் மேலாண்மையை முக்கியமானதாக கூறப்பட்டுள்ளது. வரலாற்றை வாசிப்பது, தவறுகள் மீண்டும் நிகழாமல் இருக்க என்பதை உணர்வோம். இவ்வாறு அவர் பேசினார். கூடுதல் கலெக்டர் சரண்யா உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
வண்டிப்பாளையம் கோவிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்
-
உயர்கல்வி வழிகாட்டுதல் 5ம் தேதி ஆலோசனை முகாம்
-
மலட்டாற்றில் தடுப்பு சுவர் : சபா ராஜேந்திரன் கோரிக்கை
-
உலக ஆட்டிசம் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
-
விருதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்; வியாபாரிகள் எதிர்ப்பால் பரபரப்பு
-
நெய்வேலியில் பங்குனி உத்திர விழா கொடியேற்றம்