தேசிய புத்தக கண்காட்சி

அருப்புக்கோட்டை அருப்புக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் தேசிய புத்தகக் கண்காட்சி துவக்கவிழா நடந்தது.

அருப்புக்கோட்டை வக்கீல்கள் சங்கம், மதுரை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்தினர். கண்காட்சியை அருப்புக்கோட்டை சார்பு நீதிபதி செல்வன் ஜேசுராஜா, குற்றவியல் நீதிபதி முத்து இசக்கி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி சிவரஞ்சனி திறந்து வைத்தனர். முதல் விற்பனையை மூத்த வழக்கறிஞர்கள் செல்ல பாண்டியன், கந்தசாமி ஆகியோர்களுக்கு புத்தகங்களை நீதிபதிகள் வழங்கி துவக்கி வைத்தனர். ஏற்பாடுகளை செஞ்சுரி புக் ஹவுஸ் மண்டல மேலாளர் மகேந்திரன், மேலாளர் தனசேகரன் மற்றும் வக்கீல் சங்க நிர்வாகத்தினர் செய்தனர்.

Advertisement