கதம்ப வண்டுகள் அழிப்பு

திருச்சுழி திருச்சுழி வெள்ளை பிள்ளையார் கோயில் எதிரே பழைய கால கட்டடத்தில் கதம்ப வண்டுகள் கூடு கட்டி உள்ளது. அந்த வழியாகச் செல்லும்போது மக்களை அவ்வப்போது கடித்து துன்புறுத்துகிறது.

இதுகுறித்து திருச்சுழி தீயணைப்பு துறைக்கு மக்கள் தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் சந்திரசேகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீப்பந்தத்துடன் கடைக்குள் புகுந்து கதம்ப வண்டுகளை முற்றிலுமாக அழித்தனர். வண்டுகள் மேலும் கூடு கட்டாதவாறு கிருமி நாசினிகளை தெளித்தனர்.

Advertisement