இலக்கிய மன்றம் நிறைவு விழா

ராஜபாளையம் : ராஜபாளையம் ஸ்ரீ ரமண வித்யாலயா பதின்ம மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற நிறைவு விழா நடந்தது.

பள்ளி ஆலோசகர் டாக்டர் கு. கணேசன் தலைமை வகித்தார். மாணவி சிவஸ்ரீ வரவேற்றார். புத்தக வாசிப்பின் அவசியம் குறித்து மாணவி ஹரி விசாலினி பேசினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறகை விரிப்போம் என்ற தலைப்பில் சாகித்திய அகாடமி விருதாளர் ஆயிஷா ஆர். நடராஜன் பேசினார். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவர் விஸ்வ ரோஹித் நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை முதல்வர் சுதா தலைமையில் விளையாட்டுத்துறை இயக்குனர் செந்தாமரைக் கண்ணன் நிர்வாகி ராமராஜ், ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்தனர். மாணவிகள் கவிசேனா, ஹன்சிகா தொகுத்து வழங்கினர்.

Advertisement