பரமக்குடி சர்வீஸ் ரோட்டோரம் வாறுகாலில் பிளாஸ்டிக் போர்வை; கொசுத் தொல்லையால் மக்கள் அவதி

பரமக்குடி,: பரமக்குடி வைகை ஆறு சர்வீஸ் ரோட்டோரம் வாறுகால்களில் பிளாஸ்டிக் கழிவுகள் போர்வையாக மூடப்பட்டுள்ளதால் கொசுத்தொல்லை, விபத்து அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
பரமக்குடி தரைப்பாலம் துவங்கி நகராட்சி எல்லை முடியும் சுந்தர் நகர் வரை பெரிய வாறுகால் உள்ளது. 10 அடி ஆழம் கொண்ட இந்த வாறுகால், 5 அடிக்கு மேல் கழிவுநீர் தேங்கி செல்கிறது.
வாறுகாலில் பிளாஸ்டிக் பாட்டில்கள், பேப்பர் குப்பை குவிந்துள்ளன.
பிளாஸ்டிக் ஒழிப்பு பிரசாரம் ஒரு புறம் செயல்படாமல் நீர்த்துப் போன நிலையில் அதிகாரிகளின் குறைந்தபட்ச கண்காணிப்பும் இன்றி குப்பை பெருகி உள்ளது.
சர்வீஸ் ரோட்டோரம் ஏராளமான வீடுகள், தனியார் பள்ளி, அங்கன்வாடி மையம் செயல்படுகிறது.
மேலும் ரோட்டில் இருந்து சற்று விலகினாலும், வாறுகால் பள்ளத்தில் வாகனங்கள் சிக்கி விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. இதில் மழை நீர் தேங்கி கொசு உற்பத்தி அதிகரிக்கிறது. இரவில் மட்டுமின்றி பகலிலும் அப்பகுதி மக்கள் கொசுக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே ஒட்டுமொத்த மக்கள் பிரச்னைக்கும் தீர்வு காணும் வகையில் வாறுகாலில் குவிந்துள்ள குப்பையை அகற்றி சுத்தம் செய்ய நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
வண்டிப்பாளையம் கோவிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்
-
உயர்கல்வி வழிகாட்டுதல் 5ம் தேதி ஆலோசனை முகாம்
-
மலட்டாற்றில் தடுப்பு சுவர் : சபா ராஜேந்திரன் கோரிக்கை
-
உலக ஆட்டிசம் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
-
விருதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்; வியாபாரிகள் எதிர்ப்பால் பரபரப்பு
-
நெய்வேலியில் பங்குனி உத்திர விழா கொடியேற்றம்