போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

புதுச்சேரி : புதுச்சேரி சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி., கலைவாணன் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் சீனியர் எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்தில் எஸ்.பி.,க்கள் வீரவல்லவன், ரகுநாயகம், வம்சீதர ரெட்டி, ஜிந்தா கோண்டராமன், பழனிவேலு, பக்தவச்சலம் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் குறித்து கேட்டறிந்தார். அந்த வழக்குகளில் எத்தனை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். எவ்வளவு பேர் தலைமறைவாக உள்ளனர் என்பது குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

பின், போலீஸ் நிலையயங்களில் பதிவான வழக்குகள், குற்றவாளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த விவரங்களையும் தெரிவித்தனர். நீதிமன்றம் மூலம் வாரண்ட் பிறக்கப்பட்டு தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்.

இரவு நேரங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். குற்றவாளிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கினார்.

Advertisement