புதுக்கணக்கு துவக்கம்

திருவாடானை : திருவாடானை, தொண்டியில் வர்த்தகர்கள் புதுக்கணக்கு துவங்கினர்.ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான 12 மாதங்கள் நிதியாண்டாக கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் நேற்று புதிய நிதியாண்டு பிறந்துள்ளது. திருவாடானை, தொண்டியில் வர்த்தக நிறுவனங்களில் புதுக்கணக்கு துவங்கப்பட்டது. சுவாமி படங்களுக்கு மாலை அணிவித்து பழங்கள் படைக்கபட்டது. புதிய கணக்கு புத்தகம், ரசீது வைக்கப்பட்டது. வாடிக்கையாளர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

Advertisement