வேளாண் மாணவியர் பயிற்சி

வாடிப்பட்டி: மதுரை வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவிகள் கிராமப்புற அனுபவத் திட்டத்தின் கீழ் வாடிப்பட்டி பகுதியில் தங்கி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கின்றனர். டி.ஆண்டிபட்டியில் மாணவி கோமளவள்ளி நெல் சாகுபடி ஊட்டச்சத்து குறைபாடுகளும் அதனை முறைப்படுத்தும் வழிகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். மாணவி கீர்த்தனா நீரேத்தான் விவசாயிகளுக்கு நெல் கிளிப்பிங் முறை மூலம் இலை மடிப்பு பூச்சியை கட்டுப்படுத்துவது குறித்து செயல்முறையில் விளக்கினார்.

கட்டகுளத்தில் மாணவி கிருபாஷினி காய்ந்த இலை, மட்டை மற்றும் தேங்காய் கூடுகள் மூலம் தலைக்கூழம் தயாரிப்பது, தென்னை ஓலை தலைக்கூழம் மூலம் வறட்சியை தடுக்கும் முறை குறித்து விளக்கினார்.

விராலிப்பட்டியில் மாணவி கீர்த்தனாஸ்ரீ விவசாயிகளுக்கு செறிவூட்டிய தொழு உரத்தின் செயல் முறைகள், அதன் நன்மைகள், மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஊட்டச்சத்து கிடைப்பது குறித்து விளக்கினார்.

Advertisement