கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: மத்திய அரசு பென்ஷன் விதிகளில் திருத்தம் கொண்டு வந்ததை கண்டித்து, தேசிய ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு புதுச்சேரி கிளை சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் அண்ணா சிலை அருகில் நடந்தது.

மாநில கிளை தலைவர் நடராஜன் தலைமை தாங்கி, கண்டன உரையாற்றினார். பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

பென்ஷனர்கள் சங்கத்தின் பொறுப்பாளர் சண்முகம், தபால் துறை ஓய் வூதியர்கள் சங்க பொறுப்பாளர் கலியமூர்த்தி, பி.எஸ்.என்.எல்., சங்கத்தின் நிர்வாகி ராமகிருஷ்ணன், ஜிப்மர் ஓய்வு பெற்றோர் நலச்சங்கத்தின் விஸ்வநாதன், ரயில்வே ஓய்வூதியர்கள் சங்கத்தின் ராதாகிருஷ்ணன், வருமானவரி ஓய்வூதியர்கள் சங்கம் கணேசன், புதுச்சேரி காவல் துறை ஓய்வூதியர்கள் சங்கம் மணி உட்பட பலர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில், புதிய ஓய்வு பெறும் புதிய சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement