விவசாயிகள் தனி அடையாள எண் பெறஏப்.,15 வரை காலக்கெடு நீட்டிப்பு
விவசாயிகள் தனி அடையாள எண் பெறஏப்.,15 வரை காலக்கெடு நீட்டிப்பு
கரூர்:விவசாயிகள் தனி அடையாள எண் பெற, விண்ணப்பிக்க ஏப்., 15 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கரூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிவானந்தம் வெளியிட்ட அறிக்கை: பி.எம். கிசான் ஊக்கத்தொகை, உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற, அக்ரி ஸ்டேக் இணையதளத்தில் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளின் நில ஆவணங்கள் அனைத்தையும், இந்த இணையதளம் மூலம் ஒருங்கிணைக்கும் பணிகள் தமிழகம் முழுவதும் நடந்து வருகின்றன. கடந்த பிப்ரவரி முதல், வேளாண்துறை மூலம் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆதார் அட்டை, ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண், நிலத்தின் பட்டா, சிட்டா ஆகியவற்றின் மூலம் இணையதளத்தில் விவசாயிகளின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
இதன்படி, கரூர் மாவட்டத்தில், 1 லட்சத்து, 29 ஆயிரத்து, 495 விவசாயிகள் உள்ளனர். இதில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின்கீழ் (பி.எம்.கிசான்) 50 ஆயிரத்து, 101 விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இதுநாள் வரை, பி.எம். கிசான் திட்ட பயனாளிகள், 29 ஆயிரத்து, 918 பேர், தனி அடையாள எண் பெற்றுள்ளனர். இன்னும் பி.எம். கிசான் உதவித்தொகை பெறும், 20 ஆயிரத்து, 183 விவசாயிகள் பதிவு செய்யப்படவில்லை. பி.எம். கிசான் திட்டத்தில் அடுத்த தவணைத்
தொகை மற்றும் இத்திட்டத்தில் தொடர்ந்து பயனடைய வேண்டுமென்றால், அடையாள எண் பெறுவது அவசியமானதாகும்.
இது குறித்து, பி.எம். கிசான் உதவித்தொகை பெறும் விவசாயிகளின் மொபைல் எண்ணுக்கு, ஏற்கனவே எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை பதிவு செய்து, அடையாள எண் பெறாத விவசாயிகள், உடனே கிராம அளவில் வேளாண் துறையினரால் நடத்தப்படும் முகாமிலோ அல்லது அருகாமையிலுள்ள பொது சேவை மையங்கங்களுக்கு சென்று பதிவு செய்ய வேண்டும். இதை பதிவு செய்ய காலக்கெடு வரும் ஏப்.,15 வரை நீட்டிக்கப்
பட்டுள்ளது.இவ்வாறு கூறியுள்ளார்.