ஊக்கத்தொகை பெறும்விவசாயிகளுக்கு கெடு


ஊக்கத்தொகை பெறும்விவசாயிகளுக்கு கெடு


ஈரோடு:ஈரோடு வேளாண் இணை இயக்குனர் தமிழ்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாவட்ட வேளாண் அடுக்ககம் திட்டத்தில் விவசாயிகளின் தரவுகளை சேகரித்து தனித்துவ அடையாள எண் பதிவு செய்யும் பணி, அனைத்து பொது சேவை மையங்களிலும் இலவசமாக நடந்து வருகிறது. பி.எம்.கிசான் ஊக்கத்தொகை தொடர்ந்து பெறவும், வேளாண் துறை திட்டங்களை பெறவும் இந்த எண் அவசியம். பி.எம்.கிசான் ஊக்கத்தொகை பெறும், 51,976 விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெற்றுள்ளனர். மீதி விவசாயிகள் வரும், 8ம் தேதிக்குள் தங்கள் தரவுகளை இணைத்து எண்ணை பெற வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement