ஏரி சுத்தப்படுத்தும் பணி

அவலுார்பேட்டை: மேல்மலையனுார் அருகே ஏரியில் குப்பைகளை சுத்தம் செய்யும் பணி நடந்தது.

மேல்மலையனுார் அடுத்த மேல்புதுப்பட்டு கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் அவலுார்பேட்டை வி.ஏ.ஓ., காளிதாஸ் தலைமையில் பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பைகள் உள்ளிட்ட மக்கும் தன்மையற்ற கழிவு பொருட்கள் சேகரிக்கப்பட்டது.

இப்பணியில் பாண்டியன், அசு, சுதாகர், இலக்கியா, திவேதிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். சேகரித்த குப்பை, நெகிழி கழிவுகளை தரம் பிரித்து துாய்மை காவலரிடம் மறு சுழற்சிக்காக வழங்கினர்.

Advertisement