விமல் ஜூவல்லரி திறப்பு விழா

விழுப்புரம்: விழுப்புரம் காமராஜர் வீதி, அமராபதி விநாயகர் கோவில் அருகே புதிதாக தொடங்கப்பட்ட விமல் ஜூவல்லரி திறப்பு விழா நேற்று நடந்தது.

முதல் விற்பனையை, கடை உரிமையாளர்கள் தகலாராம், விமல், பாபுலால் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

கன்னியாலால், சாந்திலால், கியான்சந்த்போரா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், வணிகர்கள், வாடிக்கையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

விழுப்புரத்தில் 51 ஆண்டுகள் மக்களின் நன் மதிப்பை பெற்ற விமல் ஜூவல்லரியின் புதிய நகை கடை திறப்பு விழா சலுகையாக, பொது மக்கள் வாங்கும் தங்க நகைகள், பவுனுக்கு ரூ.2,000 தள்ளுபடியும், செய்கூலியும் இல்லை. மிக மிக குறைந்த சேதாரம் வழங்கப்படும். வெள்ளி பொருள்கள் வாங்குவோருக்கு, ஒரு கிலோ வெள்ளி நகைகளுக்கு ரூ.4,000 தள்ளுபடி வழங்கப்படும்.

இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனை ஏப்., 2ம் தேதி முதல் ஏப்., 6ம் தேதி வரை 5 நாள்களுக்கு வழங்கப்படும்.

ஸ்வர்ண லஷ்மி சிறுசேமிப்பு திட்டத்தில் சேர்ந்தும் பயன்பெறலாம் என, உரிமையாளர்கள் தகலாராம், விமல், பாபுலால் ஆகியோர் தெரிவித்தனர்.

Advertisement