நாட்டு நலப்பணி திட்ட முகாம்

விழுப்புரம்: விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரி நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் 7 நாள் சிறப்பு முகாம் நடந்தது.

விழுப்புரம் அருகே உள்ள வி.பூதுார், பூ.கரைமேடு, பூசாரிப்பாளையம், மாங்குப்பம், கரைமேடு, கெங்கராம்பாளையம் ஆகிய கிராமங்களில் நடந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, பூ.கரைமேடு கிராம கோவில் வளாகத்தில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. கல்லுாரி முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.

புதுச்சேரி தாகூர் அரசு கலை அறிவியல் கல்லுாரி தமிழ்த் துறை பேராசிரியர் கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, உழைப்பே உயர்வு தரும் எனும் தலைப்பில், பேசினார்.

அதில், உழைப்பு தான் ஒரு மனிதனை மாமனிதனாக, மேதையாக மாற்றும். உழைப்பு இல்லையேல் மனிதனை பேதையாக்கி விடும்.

உழைப்பால் உயர்ந்த ஜி.டி.நாயுடு முதல், கனரக வாகன பெண் ஓட்டுநர் ஜோதிமணி, விபத்தில் கால் இழந்தாலும் செயற்கை கால் பொருத்திக் கொண்டு சிறந்த நாட்டிய கலைஞராக வளம் வந்த சுதா சந்திரன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

அதுபோன்றோர் வாழ்க்கை அனுபவங்கள், நமக்குப் படிப்பினையாக அமைய வேண்டும்' என்றார். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement