சென்னிமலை கோவிலில்ஏப்.,9ல் பங்குனி உத்திரதிருவிழா கொடியேற்றம்


சென்னிமலை கோவிலில்ஏப்.,9ல் பங்குனி உத்திரதிருவிழா கொடியேற்றம்


சென்னிமலை:ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களின் ஒன்றான, சென்னிமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடப்பாண்டு பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் வரும், ௯ம் தேதி நடக்கிறது. 10ம் தேதி இரவு திருக்கல்யாணம்; 11ம் தேதி அதிகாலை தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று காலை தேவஸ்தான மண்டபத்தில், அக்னி நட்சத்திர அன்னதான விழாக்குழு சார்பாக அன்னதானம்
நடக்கிறது.அன்று மாலை, 5:00 மணிக்கு தேர் நிலை சேரும். 12ம் தேதி காலை பரிவேட்டை, இரவு தெப்பத்தேர் நிகழ்ச்சி நடக்கிறது. 13ம் தேதி காலை மகாதரிசன நிகழ்ச்சி, இரவில் மஞ்சள் நீர் அபிஷேகத்துடன்
பங்குனி உத்திர திருவிழா நிறைவு பெறுகிறது.

Advertisement