தேசிய விளையாட்டு போட்டிகளில் விழுப்புரம் மாணவர்கள் பங்கேற்பு

விழுப்புரம்: தேசிய விளையாட்டு போட்டிகளில், விழுப்புரம் ஜெயேந்திர பள்ளியைச் சேர்ந்த 22 மாணவர்கள் பங்கேற்றனர்.

விழுப்புரம் � ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி மாணவர்கள், ஹேன்ட் பால், ரக்பி, சாப்ட் பால் மற்றும் மல்லர் கம்பம் போட்டிகளில், தமிழக அணிக்கு தேர்வு பெற்றனர்.

இதையடுத்து, பஞ்சாப், மகாராஷ்டிரா, பீகார் ஆகிய மாநிலங்களில் நடைபெறும் தேசிய பள்ளிகளுக்கான போட்டிகளில், ஜெயேந்திர பள்ளி மாணவர்கள் 22 பேர், தமிழக அணி சார்பில் பங்கேற்றனர்.

இம்மாணவர்களுக்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், பாராட்டு தெரிவித்தார். பள்ளியின் தாளாளர் பிரகாஷ், செயலாளர் ஜனார்த்தனன், உடற்கல்வி இயக்குனர் தமிழ்மணி உடனிருந்தனர்.

மேலும், விளையாட்டுகளில் சிறந்த மாணவர்களுக்கு, ஜெயேந்திர பள்ளியில் கல்வி கட்டண சலுகை வழங்கப்படும் என, செயலாளர் ஜனார்த்தனன் தெரிவித்தார்.

Advertisement