பெருந்துறையில் நாளை ஆர்ப்பாட்டம் 'கன்பார்ம்'


பெருந்துறையில் நாளை ஆர்ப்பாட்டம் 'கன்பார்ம்'


பெருந்துறை:ஓடையில் அமில கழிவு நீரை கொட்டிய, சிப்காட் தனியார் ஸ்டீல் ஆலையின் இசைவாணையை ரத்து செய்து நிரந்தரமாக மூட வேண்டும். நிறுவனத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்து, பாதிப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
சிப்காட் பொது சுத்திகரிப்பு நிலைய பணிகளை தாமதமின்றி விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்., ௩ம் தேதி காலை, சிப்காட்டில் உள்ள மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கும் என்று, பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கம் அறிவித்தது.
இதனால் சங்கத்தினரை நேற்று அழைத்து, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வனஜா, மாவட்ட உதவி பொறியாளர் செல்வகணபதி பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய உத்தரவாதம் எதுவும் கிடைக்காததால், அறிவித்தபடி நாளை போராட்டம் நடக்கும் என்று, சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement