ரூ.1.02 கோடிக்குபருத்தி வர்த்தகம்
ரூ.1.02 கோடிக்குபருத்தி வர்த்தகம்
நாமக்கல்:நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு செவ்வாய்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடக்கிறது. அதன்படி நேற்று நடந்த ஏலத்திற்கு, நாமக்கல் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், 4,436 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில், ஆர்.சி.ஹெச்., ரக பருத்தி குவிண்டால், 7,189 ரூபாய் முதல், 7,950 ரூபாய், சுரபி ரகம், 8,200 ரூபாய் முதல், 9,189 ரூபாய்; கொட்டு மட்ட ரகம், 4,199 ரூபாய் முதல், 5,609 ரூபாய் என, மொத்தம், ஒரு கோடியே, 2 லட்சம் ரூபாய்க்கு பருத்தி விற்பனையானது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement