415 வாகனங்கள் தணிக்கைரூ.1.04 லட்சம் வரி வசூலிப்பு



415 வாகனங்கள் தணிக்கைரூ.1.04 லட்சம் வரி வசூலிப்பு


பள்ளிப்பாளையம்:குமாரபாளையம் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் கூறியதாவது: குமாரபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் மாதவன் தலைமையில், கடந்த மார்ச் மாதம் பஸ், லாரி, வேன் உள்ளிட்ட, 415 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. இதில், 80 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டு, ஒரு லட்சத்து, 4,000 ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டது.
ஒரு லட்சத்து, 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும், நான்கு லட்சத்து, 99,500 ரூபாய் அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதி சான்று இல்லாத, 11 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement