கஞ்சா செடி வளர்த்தவாலிபருக்கு 'காப்பு'



கஞ்சா செடி வளர்த்தவாலிபருக்கு 'காப்பு'


சேந்தமங்கலம்:கொல்லிமலை யூனியன், கிராய்ப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 21. இவர், மூலக்காடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், கிருஷ்ணமூர்த்திக்கு, சில மாதங்களுக்கு முன் நண்பர் ஒருவர் மூலம் கஞ்சா விதை கிடைத்துள்ளது.இந்த விதையை செடியாக்க நினைத்த அவர், பிளாஸ்டிக் குடத்தை பாதியாக வெட்டி அதில் மண்ணை கொட்டி கஞ்சா விதையை பதியமிட்டு அங்குள்ள முட்புதரில் மறைத்து வைத்திருந்தார்.
இந்த செடியில் இருந்து, நேற்று முன்தினம் பூக்கள் பூத்து வாசனை வந்ததால், இதை மோப்பம் பிடித்த போலீசார் கஞ்சா செடியை பறிமுதல் செய்து, வாலிபர் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.

Advertisement