எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டம்
கோவை; மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில், 48 மனுக்களுக்கு சுமூக தீர்வு காணப்பட்டது.
பொது மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது, விசாரணை மற்றும் ஏற்கனவே எடுக்கப்பட்ட நடவடிக்கை மீது அதிருப்தி உள்ளவர்களின் மனுக்கள் மீதான மறு விசாரணை, ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், எஸ்.பி., கார்த்திகேயன் தலைமையில் நடத்தப்படுகிறது. நேற்று நடந்த குறைதீர் முகாமில் குடும்ப பிரச்னை, பணப்பரிமாற்ற பிரச்னை, இடப்பிரச்னை தொடர்பாக, 57 மனுக்கள் மீது மறுவிசாரணை நடத்தப்பட்டது.
அதில் 48 மனுக்களுக்கு, சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாக பேசி, சுமூகமான முறையில் தீர்வு காணப்பட்டது; எட்டு மனுக்கள் மேல் விசாரணை செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. மேலும் ஒரு வழக்கு மீது, எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோவில் நிலங்களுக்கு பட்டா 'நோ'
-
17 மாவட்டங்களில் 50 புதிய குறு வட்டங்கள் அமைச்சர் ராமச்சந்திரன் அறிவிப்பு
-
கச்சபேஸ்வரர் தெப்போத்சவம் தாயார் குளத்தில் இன்று துவக்கம்
-
துாத்துக்குடி அனல் மின் நிலைய தீவிபத்து சேதம் குறித்து ஆய்வு செய்கிறது குழு அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
-
சட்டசபையில் இன்று
-
கூடுதல் மின்சாரம் கையாள டிரான்ஸ்பார்மர் திறன் உயர்வு
Advertisement
Advertisement