சிறுமியை பலாத்காரம் செய்த தாயின் கள்ளக்காதலன் கைது * உடந்தை தாய், மற்றொரு வாலிபரும் கைது
ராமநாதபுரம்:-ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தாயின் கள்ளக்காதலன், உடந்தையாக இருந்த தாய் உட்பட 3 பேரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
இம்மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளியில் 9 ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வகுப்பில் அழுது கொண்டிருந்தார். இதுகுறித்து ஆசிரியர் விசாரித்த போது தனக்கு பாலியல் சீண்டல்கள் இருப்பதாக சிறுமி தெரிவித்தார். ஆசிரியர் இது தொடர்பாக சைல்டு லைனில் புகார் செய்தார். சைல்டு லைன் கண்காணிப்பாளர் கிருஷ்ணவேனி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சிறுமியிடம் விசாரித்தனர்.
சிறுமி தாயாருடன் வசிப்பதும், தந்தை துபாயில் வேலை செய்வதும் தெரிய வந்தது. கோவை தனியார் கல்லுாரியில் பி.டெக்., மூன்றாம் ஆண்டு படிக்கும் வாலாந்தரவையைச் சேர்ந்த இளையராஜா மகன் நவீன் 21. இவருக்கும் சிறுமி தாயாருக்கும் தொடர்பு இருந்தது. இந்நிலையில் தாயாரின் ஒத்துழைப்புடன் நவீன் சிறுமியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். சிறுமி வீடு அருகிலுள்ள ஆசிரியையிடம் டியூசன் படிக்க செல்லும் போது ஆசிரியை மகன் பரத்தும் 19, சிறுமியை பாலியல் சீண்டல் செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து சிறுமியின் தாயார், நவீன், பரத் மீதும் போக்சோ பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் போலீசார் பின் மூவரையும் கைது செய்தனர். சிறுமியை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதித்தனர்.