ஊரக வளர்ச்சி அலுவலர் ஆர்ப்பாட்டம்

மதுரை: பெரம்பலுார் கலெக்டரை கண்டித்து அரசு ஊழியர் சங்கம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் மதுரையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாலையில் பணிநேரத்திற்கு பின்னர் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தமிழ் தலைமை வகித்தார். செயலாளர் சந்திரபோஸ் கண்டித்து பேசினார். ஊரக வளர்ச்சி அலுவலர் சங்க செயலாளர் அன்பழகன், வருவாய் அலுவலர் சங்க செயலாளர் முகைதீன்அப்துல்காதர், அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் நீதிராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.

பெரம்பலுார் கலெக்டர் கிரேஸ்பச்சாவ், திட்ட அலுவலர் தேவநாதனை சந்திக்கச் சென்ற ஊரக வளர்ச்சித்துறை, அரசு ஊழியர் சங்க மாநில நிர்வாகிகளை அவமதித்து கைது செய்ய நடவடிக்கை எடுத்ததைக் கண்டித்து கோஷமிட்டனர்.

Advertisement