தங்கவயல் செக் போஸ்ட்

குடிநீர் பிரச்னைக்காக கோல்டன் வேலி கல்லுாரி நிர்வாகம், 'மாஜி' எம்.பி., தொகுதி நிதி, என பலர் உதவியில் டேங்கர் லாரிகள் கிடைத்தன. அது துருப்பிடித்து பயனற்றபடி காயலான் கடையில் இருப்பது போல முனிசி., வளாகத்தில் நிறுத்தி வெச்சிருக்காங்க.

தண்ணீர் பிரச்னையே இல்லை என்று சொல்ல முடியுமா. போர்வெல் நீர் கிடைப்பதை போதும் என்பதா. இதனால் உடல்நல பாதிப்பு ஏற்படுவதை கவனிக்க வேணாமா.

ரா.பேட்டை பஸ் நிலையத்தில் போர்வெல் நீரை சுத்திகரித்து விற்பனை செய்ய மையம் ஏற்படுத்தினாங்களே; பல வருஷமா மூடியே வெச்சிருக்காங்களே. போர்வெல் ஏற்படுத்த, சுத்திகரிப்பு நிலையம் ஏற்படுத்த ஆர்.ஓ., பிளாண்ட் அமைக்க பல லட்சம் செலவழித்து மக்கள் வரி பணத்தை சும்மா 'வேஸ்ட்' செய்றாங்களே. இதை யார் கணக்கில் சேர்ப்பது; நஷ்டம் ஏற்பட்டதற்கு யார் பொறுப்பு.

சிட்டி வளர்ச்சிக்காக முனிசி.,க்கு பல வகையில் பணம் கோடியில் வந்தாலும், அதனை முறையாக பயன்படுத்தாமல் வீணாக்குறாங்களாம். சாலைகள், தெருக்களில் குப்பைகளை கூட்ட இயந்திரங்களை வாங்கினாங்களே; எங்கே, என்ன ஆனது.

பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் ரிப்பேர் செய்யாமல் குப்பை கிடங்கில் நிறுத்தினாங்களே அது பற்றி ஞாபகம் இருக்குதா. பழுதான வாகனத்தை அமரர் ஊர்தியாக தயார் செய்யப்போவதாக ஜனங்கள நம்ப வெச்சாங்களே, அந்த அமரர் ஊர்தி திட்டமும் செத்துப் போச்சா. 30 ஆண்டுக்கு மேலாக அமரர் ஊர்தி வேண்டும் என்று ஊதிய சங்கை பல முறை ஊதியும், அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்குது.

எம்.ஜி., மார்க்கெட் கடைகள் பிரச்னை, உயர் நீதிமன்ற டபுள் பெஞ்சில் விசாரணையில் இருக்கும் போது, அதே மார்க்கெட்டில் நடைபாதை தெருவோர கடைகளுக்கு முனிசி.,யில் டெண்டர் விட்டிருக்காங்க. இது சட்ட அவமதிப்பு ஆகாதா.

யாரோ செய்ற தப்புக்கு கவுன்சிலர்கள் அனைவருமே சட்டத்துக்கு முன் தலை குனியனுமா. இதை தான் முனிசி.,யில் உள்ள ஒரு ரோஷக்கார மானஸ்தர் விளக்கம் கேட்டிருக்காரு. வருமானத்துக்காக சட்டத்தை மீறி என்ன வேணுமானாலும் செய்யலாமா என்பது தான் அவரோட வாதமாம்.

நடைபாதை கடைகளில் காய்கறி விற்பனை செய்துக்கொள்ள டெண்டர் விட்டவங்க, 1,000 க்கும் அதிகமான கடைகளை ஏன் டெண்டர் விடல. இதுக்கு மட்டும் சட்டம் தடையாக இருக்குதோ. இப்படி கொளுத்தி போட்ட விஷயம் ஊரில் உலா வருது.

ஏலம் விடாமல் இருக்க, வி.ஐ.பி., வீடுகளுக்கு மூட்டையாக போனதை, பணம் கொடுத்தவங்க மறக்கலயாம்.

உபதேசம் சொல்வதில் அர்த்தமில்லை. கோர்ட்டில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க என்ன தான் வழி.

சட்ட பிதா ஜெயந்தி இம்மாதம் 14 ல் நாடெங்கும் கொண்டாடுறாங்க. அவர் கால் பதித்த கோல்டு சிட்டியிலும் மறக்காமல் கட்சிகளை மறந்து கொண்டாடுறாங்க.

பத்துக்கும் மேற்பட்ட கண்ணியமிக்கவர்கள் ஜெயந்தியை, தாலுகா நிர்வாகத்தில் உள்ள அனைத்து துறைகளும் சேர்ந்து ஆடல், பாடலுடன் தேர் திருவிழாவை நடத்துறாங்க.

அதே போல, பாபா சாஹேப் , பாபுஜி பர்த்டேவையும் கொண்டாட ஆலோசனைக் கூட்டமும் நடத்தினாங்க. ஆனால், தாலுகா நிர்வாகம் கொண்டாடலையே.

ஒரே தொகுதியில் பாபா சாஹேபுக்கு 15 சிலைகள் இருப்பதாக பெருமை பேசுறாங்க. ஆனால், கோல்டு சிட்டியின் பூங்காவில் உள்ள முதல் சிலை மற்றும் அதன் பக்கத்தில் அவரின் பெயரில் உள்ள 'பவன்' கட்டடம் அகற்ற, உயர் நீதிமன்றத்தில் வழக்கு இருக்குதே, இந்த வழக்குக்கு எப்போ விடுதலை என்று நகர மக்கள் கேட்குறாங்க.

சர்வ கட்சிகள், பொதுநல அமைப்புகள் இந்த சிலைக்கு தானே மாலை அணிவித்து தங்களை அடையாளப்படுத்திக்கிறாங்க.

ஆதாய விழா!

Advertisement