மத்திய அரசின் சர்வாதிகாரம் காங்., - எம்.பி., கண்டனம்

பீதர் : லோக்சபாவில் துணை சபாநாயகரை நியமிக்காமல், சர்வாதிகார அணுகுமுறையை கடைபிடிப்பதாக மத்திய அரசை, பீதர் காங்கிரஸ் எம்.பி., சாகர் கன்ட்ரே சாடி உள்ளார்.
பீதரில் அவர் அளித்த பேட்டி:
அரசியலமைப்பு ரீதியாகவும், ஜனநாயக கொள்கையின் அடிப்படையிலும், லோக்சபா நடக்க வேண்டும். 2019ல் இருந்து லோக்சபாவில் துணை சபாநாயகர் இல்லை. இவ்விஷயத்தில் மத்திய அரசு சர்வாதிகார அணுகுமுறையை கடைப்பிடிக்கிறது.
லோக்சபா ஜனநாயக ரீதியாக செயல்படும் வகையில், கட்சி பாகுபாடின்றி அனைத்து எம்.பி.,க்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும்.
லோக்சபாவில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. முக்கிய பிரச்னைகள் பற்றி நாங்கள் பேசும் போது 'மைக் ஆப்' செய்யப்படுகிறது.
இது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குரல்களை நசுக்கும் செயல். ஆனால் ஆளுங்கட்சி எம்.பி.,க்கள் பேச எந்த கட்டுப்பாடும் இல்லை. இந்த பாரபட்ச போக்கு ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.
அவசர மற்றும் பொது நலன் சார்ந்த விஷயங்கள் பற்றி விவாதிக்க வேண்டிய விதி 193 முறையாக பயன்படுத்தப்படவில்லை. மத்திய அரசு தன் பொறுப்பை தட்டிக்கழிக்க முயற்சி செய்கிறது.
நிலைக்குழுக்களில் சுயாட்சி பறிக்கப்படுகிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதை தொலைக்காட்சியில் காட்டுவது இல்லை. நியாயமான, வெளிப்படை தன்மையுடன் லோக்சபா செயல்பட, எதிர்க்கட்சியினர் ஒருங்கிணைந்து குரல் எழுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
வண்டிப்பாளையம் கோவிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்
-
உயர்கல்வி வழிகாட்டுதல் 5ம் தேதி ஆலோசனை முகாம்
-
மலட்டாற்றில் தடுப்பு சுவர் : சபா ராஜேந்திரன் கோரிக்கை
-
உலக ஆட்டிசம் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
-
விருதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்; வியாபாரிகள் எதிர்ப்பால் பரபரப்பு
-
நெய்வேலியில் பங்குனி உத்திர விழா கொடியேற்றம்