மலட்டாற்றில் தடுப்பு சுவர் : சபா ராஜேந்திரன் கோரிக்கை

நெய்வேலி; தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தில், நெய்வேலி தொகுதி எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் பேசியதாவது:
எனது தொகுதிக்குட்பட்ட திருவாமூர் அடுத்துள்ள மலட்டாற்றின் வழியாக வெள்ளநீர் புகாமல் இருக்க, 500 மீட்டரில் தடுப்புச் சுவர் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். பதிலளித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், வெள்ளத்தடுப்புச் சுவர் அமைக்க ரூ. 90 லட்சம் ரூபாய் ஆகும் என்று முன்னர் மதிப்பிடப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டு மானிய கோரிக்கையின்போது, கெடிலம் ஆற்றின் குறுக்கே ரூ.37 கோடி மதிப்பீட்டில் காமாட்சிபேட்டை என்ற இடத்தில் தடுப்பணை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பணை அமையும் காமாட்சிபேட்டை என்ற இடத்திலிருந்து திருவாமூர் ஊராட்சியில் உள்ள கெடிலம் ஆற்றின் கரைகள் 600 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்தக் கரையை பலப்படுத்தும் பணி இந்த மதிப்பீட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. விரைவில், நிர்வாகம் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றார்.
தொடர்ந்து சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., பேசுகையில், நெய்வேலி தொகுதிக்குட்பட்ட விசூர் வெள்ளவாரி ஓடையில் மழைக் காலங்களில் வெள்ளநீர் விளை நிலங்களில் புகாமல் இருக்கவும், கீழிருப்பு ஓடையில் உள்ள தடுப்பணையை சீரமைக்கவும் நிதி ஒதுக்கி, பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். அதற்கு, எம்.எம்.ஏ., கோரிக்கையை அரசு முன்னுரிமை கொடுத்து பரிசீலிக்கும் என, அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
மேலும்
-
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
-
ஓய்வு கிடைப்பதால் பீட் ஆபீசர்கள் நிம்மதி! ஷிப்ட் அடிப்படையில் போலீசாருக்கு பணி
-
செம்மொழி பூங்காவுக்குள் என்ன நடக்குது; நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் ஆய்வு
-
வாகனம் செல்வதில் பிரச்னை; பெண்ணை கொடூரமாக தாக்கிய நபர்
-
கொங்குநாடு மருத்துவமனையில் சிறப்பு சலுகையில் அறுவை சிகிச்சை
-
சி.எம்.எஸ்., பொறியியல் கல்லுாரி ஆண்டு விளையாட்டு விழா