முன்னறிவிப்பு இல்லா தொடர் மின்தடை இதை சரி செய்யுங்க; தேர்வு நேரத்தில் மாணவர்கள் தவிப்பு

கோடைகாலம் துவங்கும் முன்பே சில வாரங்களாக வெயிலின் அளவு படிப்படியாக உயர்ந்து வருகிறது. காலை முதலே தொடர்வதால் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. அக்னி நட்சத்திர காலத்திற்கு இணையாக வெப்பத்தின் கோர முகத்தை வெளிப்படுத்தி வருகிறது. மாலை, இரவு நேரங்களிலும் இதன் தாக்கம் கணிசமான அளவில் அதிகரித்து வருகிறது.
சில இடங்களில் 3 நாட்களாக மாலை நேரங்களில் கருமேகம் பரவலாக சூழ்ந்த போதும் சாரல் மழை கூட பெய்யவில்லை. இதற்கு ஏற்ப நகர் மட்டுமின்றி கிராமங்களிலும் அறிவிக்கப்படாத மின்தடை சில நாட்களாக பரவலாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. பகல் மட்டுமின்றி இரவிலும், ஒரு மணி நேர இடைவெளியில் அவ்வப்போது மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.
முதியோர், கர்ப்பிணிகள், குழந்தைகள் உள்ளிட்டோர் வெப்பத்தின் தாக்கத்தால் அதிக பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.
குக்கிராமங்களில் சூழ்ந்துள்ள இருளை பயன்படுத்தி சமூக விரோத செயல்கள் தாராளமாக நடக்கிறது. பிளஸ் 2, பிளஸ் 1 தேர்வுகள் முடிந்த போதும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதி பொதுத் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
அவ்வப்போது மின்தடை காரணமாக, மாலை 6:00 முதல் மறுநாள் காலை 6 :00மணி வரை மாணவர்கள் தேர்வுக்கு தயாராக முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பள்ளி மாணவர்கள், முதியோர் நலனை கருத்தில் கொண்டு தடையற்ற மின் வினியோகத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள முன்வர வேண்டும்.
மேலும்
-
வண்டிப்பாளையம் கோவிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்
-
உயர்கல்வி வழிகாட்டுதல் 5ம் தேதி ஆலோசனை முகாம்
-
மலட்டாற்றில் தடுப்பு சுவர் : சபா ராஜேந்திரன் கோரிக்கை
-
உலக ஆட்டிசம் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
-
விருதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்; வியாபாரிகள் எதிர்ப்பால் பரபரப்பு
-
நெய்வேலியில் பங்குனி உத்திர விழா கொடியேற்றம்