இளைஞர் காங்., உண்ணாவிரதம்

புதுச்சேரி : புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 25 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு இளைஞர் காங்., உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பா.ஜ., அரசால் வஞ்சிக்கப்படும், புதுச்சேரி மாநில மாணவர்களின் உரிமை கேட்டு இளைஞர் காங்., சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர்.
இளைஞர் காங்., தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., காங்., மூத்த துணைத் தலைவர் தேவதாஸ், வழக்கறிஞர் பிரிவு தலைவர் மருதுபாண்டியன், பொறுப்பாளர் ஜோஸ்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரதத்தில், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தினமும் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். சரியான மருத்துவ காப்பீட்டு வருவாய் திருப்பிச் செலுத்தும் திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உதவித் தொகையை சரியான நேரத்தில் வழங்க வேண்டும். அனைத்து இறுதி ஆண்டு மாணவர்களுக்கும் பட்டமளிப்பு விழாவை காலம் தாழ்த்தாமல் ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. நிர்வாகிகள் வினோத், அஜித், ஜமீல், அத்வானி, ஜெய், ராஜசேகர், மாறன், அபிலாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.