பள்ளிகளில் ஆண்டு விழா

பள்ளிகளில் ஆண்டு விழா

பரமக்குடி: பரமக்குடி சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. சவுராஷ்டிரா கல்விக் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். உப தலைவர் மனோகரன், பொருளாளர் பரசுராமன், இளநிலை பள்ளி தாளாளர் மாருதிராம், நர்சரி பள்ளி தாளாளர் மணிகண்டன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜன் முன்னிலை வகித்தனர். பள்ளி தாளாளர் ரெங்கன் வரவேற்றார்.

தலைமை ஆசிரியர் நாகராஜன் ஆண்டறிக்கை வாசித்தார். தாம்பரம் தனலட்சுமி இன்ஜினீயரிங் கல்லுாரி சேர்மன் ராமமூர்த்தி, பெங்களூரு விஸ்வநாத், மதுரை ரவீந்திரநாதன் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினர்.

கல்விக் குழு செயற்குழு உறுப்பினர்கள், பெற்றோர், மாணவர்கள் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. உதவி தலைமை ஆசிரியர் தனசேகரன் நன்றி கூறினார்.

*ஆர்.எஸ்.மங்கலம் அருகே கொத்திடல் களக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர்கள் தமிழரசி தலைமை வகித்தார். தேன்மொழி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி வரவேற்றார்.

மாணவர்கள், பொதுமக்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பாலியல் குற்றங்கள் தடுப்பு, போதை பொருட்கள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

கிராம பொறுப்பாளர் நாகு, முன்னாள் ஊராட்சி தலைவர் ஆனந்த், உதவி ஆசிரியர்கள் அமலி ரோஸ், பகவதி, ரூபி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

*ஆர்.எஸ்.மங்கலம் அருகே அளுந்திக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை ஜோதி தலைமையில் பள்ளி ஆண்டு விழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர் தமிழரசி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் மோகன் முன்னிலை வகித்தனர். விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. உதவி ஆசிரியர் சாந்தி, கல்வி மேலாண்மை குழு தலைவி சசிகலா, பி.டி.ஐ., தலைவி கோமதி, முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் கந்தசாமி, சசிகுமார், ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

*நயினார்கோவில் அருகே பாண்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா நடந்தது. பி.எஸ்.ஆர்., சேம்பர் உரிமையாளர் பன்னீர் தலைமை வகித்தார். தலைமையாசிரியை உமாதேவி வரவேற்றார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், தனி திறன் போட்டிகள் நடைபெற்றன. பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியர் ஜான் கென்னடி தொகுத்து வழங்கினார்.ஆசிரியை மணிமேகலை நன்றி கூறினார்.

Advertisement