பட்டதாரி ஆசிரியர்கள் இடமாற்றம்
புதுச்சேரி : காரைக்கால் அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் 7 தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் புதுச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, காரைக்கால் பூவம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் பானுபிரியா, கரையாம்புத்துார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும், டி.ஆர்.பட்டினம் அரசு நடுநிலைப்பள்ளியில் பணிபுரியும் ஹேமா, நெட் டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும், கோவில் பத்து பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் வீரபாண்டியன், பாகூர் கஸ்துாரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும் மாற்றப்பட்டனர்.
இதேபோல் ஆசிரியை அலமேலு கலிதீர்த்தாள்குப்பம் கலைஞர் கருணாநிதி அரசு மேல்நிலைப்பள்ளிக்கும், ஆசிரியை சங்கீதா பி.எஸ். நல்லுார் அரசு நடுநிலைப்பள்ளிக்கும், வடமட்டம் அரசு நடுநிலைப் பள்ளியில் பணி யாற்றி வரும் ஞானசவுந்தரி, பனையடிக்குப்பம் அரசு நடு நிலைப்பள்ளிக்கும், கோத்து குளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பணிபுரியும் வானதி, கூனிச்சம்பட்டு அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளிக்கும் மாற்றப்பட்டனர்.
இதற்கான உத்த ரவை பள்ளி கல்வித்துறை துணை இயக்குநர் (நிர்வாகம்) வெர்பினா ஜெயராஜ் பிறப்பித்துள்ளார்.