மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே வாணியக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் கோடை வெயில் தாக்கத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் அம்மை நோய், உடல் சூடு உள்ளிட்ட பல்வேறு நோய் தாக்கம் குறைய வேண்டி மூலவர் அம்மனுக்கு கிராமத்தார் சார்பில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

முன்னதாக சந்தனம், பால், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு தீப ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கோயிலில், கேழ்வரகு கூழ், அரிசி மாவு களி, அரிசி மாவு புட்டு, அவல் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

Advertisement