கஞ்சா விற்றவர் கைது

காட்டுமன்னார்கோவில் : குமராட்சி அருகே கஞ்சா விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

குமராட்சி அடுத்த பிள்ளையார்தாங்கல் கிராமத்தில் கஞ்சா விற்கப்படுவதாக குமராட்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேரில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த சுர்ஜித்குமார்,35, என்பவரை போலீசார் கைது செய்து, 500 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement