அரசு பஸ் மீது லாரி மோதல்

பெண்ணாடம் : சிமெண்ட் லாரி மோதியதில் அரசு டவுன் பஸ்சின் பின் கண்ணாடி உடைந்து சேதமானது.

விருத்தாசலத்தில் இருந்து டி.என்.32- என்- 4090 பதிவெண் கொண்ட அரசு டவுன் பஸ் நேற்று முன்தினம் திட்டக்குடி சென்று கொண்டிருந்தது. பஸ்சை ஸ்ரீமுஷ்ணம் வெங்கடேசன்,50; என்பவர் ஓட்டினார். கண்டக்டராக உளுந்துார்பேட்டை பிரபாகரன், 25; பணியில் இருந்தார். இரவு 9:40 மணிக்கு பெண்ணாடம் பஸ் நிலையம் வந்து, பயணிகளை இறக்கி விட்டு புறப்படும்போது அரியலுார் மாவட்டம், தளவாய் பகுதியில் இருந்து டி.என்.19 -ஏ.ஒய் 2030 பதிவெண் கொண்ட சிமெண்ட் லோடு ஏற்றி வந்த லாரி, பஸ்சின் பக்கவாட்டில் மோதியது.

இதில் பஸ்சின் பின் கண்ணாடி உடைந்து சேதமானது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பெண்ணாடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement