பட்டா வழங்கும் இடங்கள் கலெக்டர் ஆய்வு

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சியில் பட்டா வழங்க உள்ள இடங்களை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.

நெல்லிக்குப்பம் நகராட்சியில் திடீர்க்குப்பம், மேல்பாதி உட்பட பல இடங்களில் உள்ள புறம்போக்கு இடங்களில் வசிக்கும் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு பட்டா வழங்க வருவாய் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டா வழங்க உள்ள திடீர்குப்பம் உள்ளிட்ட இடங்களை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார். உண்மையான பயனாளிகள் தான் வசிக்கிறார்களா என ஆவணங்களை சரி பார்த்தார். பின், நகராட்சி மருத்துவமனையில் 2 கோடி ரூபாய் மதிப்பில் திட்டப் பணிகளை ஆய்வு செய்த அவரிடம் குடிநீர் வசதியில்லை என, நோயாளிகள் புகார் கூறினர்.

இப்பிரச்னையை சரி செய்யவும், திட்டப் பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கமிஷனர் கிருஷ்ணராஜன், தாசில்தார் ஆனந்த், வருவாய் ஆய்வாளர் ஜான்சிராணி, சர்வேயர் நந்தகுமார் உடனிருந்தனர்.

Advertisement