கோடை கால நீச்சல் பயிற்சி துவக்கம்

கடலுார் : கடலுார் அண்ணா விளையாட்டரங்க நீச்சல் குளத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான கோடைக்கால நீச்சல் பயிற்சி வகுப்பு துவக்க நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் தலைமை தாங்கி, பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார்.

இதில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது. 5 கட்டமாக நடைபெறவுள்ள நீச்சல் பயிற்சியில் முதற்கட்டமாக நேற்று, 50 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வரும் ஜூன் 8ம் தேதி வரை தினமும் 1 மணி நேரம் பயிற்சி வகுப்பு நடக்கிறது. ஒவ்வொருவருக்கும் 12 நாட்களுக்கு பயிற்சி அளித்து சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

Advertisement